aganazhigai@gmail.com | +91 701 013 9184
இணுவையூர் மயூரன் | Inuvaiyur Mayuran
₹ 250.00
Description
அந்நிய மண்ணில் தமிழில் ஆர்வம் காட்டியவன். இன்றும் மொழியில் அந்நியம் காட்டாது அந்நியோன்னியம் காண்பிப்பது அகமகிழ்வைத் தருகின்றது. - ஏ.ஜே.ஞானேந்திரன் சுவிஸ்-புலம்பெயர் வாழ்வில் தமிழைக் கற்றவர் - இணுவையூர் மயூரன். இருந்தும், இவர் படைக்கு…மேலும்
அந்நிய மண்ணில் தமிழில் ஆர்வம் காட்டியவன். இன்றும் மொழியில் அந்நியம் காட்டாது அந்நியோன்னியம் காண்பிப்பது அகமகிழ்வைத் தருகின்றது. - ஏ.ஜே.ஞானேந்திரன் சுவிஸ்-புலம்பெயர் வாழ்வில் தமிழைக் கற்றவர் - இணுவையூர் மயூரன். இருந்தும், இவர் படைக்கும் மொழிநடையோ பண்டிதப் பரம்பரையின் தமிழ் ஊற்று என்பேன். தமிழ் தன் உயிர்ப்பின் இரகசியமாக மயூரன் போன்ற புலம் பெயர் இரண்டாம் இளம் சந்ததியையும் வளர்த்துக்கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்நூல் தரும் கவிதைகள் தமிழின் மகுடமாக வாழ்த்துகிறேன். - கலாநிதி கல்லாறு சதீஷ் மயூரனின் எழுத்துக்கள் தனித்துவமானவை. தனக்கான உலகை தன் எழுத்துக்களாலேயே சிருஷ்டிக்கும் அழகிய பாங்கு மயூரனின் எழுத்து வெளிகள் எங்கும் காணலாம். அனுபவத்தை பதிவு செய்வது மட்டுமல்ல கவிதை . வாசகர்களிற்கும் அனுபவ உணர்வை தோற்றுவிப்பதே கவிஞரின் தனித்துவமாகின்றது. - கரவை பரணி மண்மணம் மாறாமல் படைப்புகளை வழங்கி தமிழுக்கு உரம் சேர்த்த இணுவையூர் மயூரன் அவர்களுக்கு, கடந்த ஆண்டு “கவிநய பாரதி” என்ற கௌரவத்தை வழங்கியிருந்தேன். அவரது கவிதைத் தொகுதி இந்த ஆண்டில் வெளிவருவது எமக்குப் பெருமகிழ்வே.. எனது ஆசிகளும் வாழ்த்துகளும் என்றும் உரித்தாகுக.. - அளவையூர் கவிக்குமரன் கலைஞானமணி லம்போதரன் பால்மணம் மாறா வயதில் புலம் பெயர்ந்தவன். ஊர் மணம் வீசும் கவிதைகள் பொழிபவன். வெண்பா எழுதும் புலமையை பெற்றவன் வானொலி குருத்து யாழ் களமென வாசிக்கப்பட்டவன். வாசகர் களாலே நேசிக்கப்பட்டவன். வெண்பனி வீசும் அழகிய நாட்டில் தன் பணி தமிழ் தமிழ் தமிழ் என்றே தரணியில் அலைந்தவன்... திருக்குறளாய் ஒரு தொகுதி திறமையை வெளியிடுகிறான் திசையெங்கும் உன்னதம் பெற வாழ்த்துகின்றேன் - நிலாவெளி கைலைமேலும்
Author: இணுவையூர் மயூரன் | Inuvaiyur Mayuran
Categories: கவிதைகள் | Poems
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.