aganazhigai@gmail.com | +91 701 013 9184
சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் | S.A.Vengada Soupraya Nayagar
₹ 240.00
Description
ஒரு மொழி தன்னளவில் அடர்த்தி பெறுவதும் தன் காலத்து வளர்நிலையை எட்டிப் பிடிப்பதும் மொழியாக்கங்களால் மட்டுமே சாத்தியம். நாயகரின் படைப்புகள் பெரும்பான்மையும் படித்தவன் என்ற முறையில், திட்டத்துடனும் நோக்கத்துடனுமே அவர் இயங்குகிறார் என்பது தெ…மேலும்
ஒரு மொழி தன்னளவில் அடர்த்தி பெறுவதும் தன் காலத்து வளர்நிலையை எட்டிப் பிடிப்பதும் மொழியாக்கங்களால் மட்டுமே சாத்தியம். நாயகரின் படைப்புகள் பெரும்பான்மையும் படித்தவன் என்ற முறையில், திட்டத்துடனும் நோக்கத்துடனுமே அவர் இயங்குகிறார் என்பது தெரிய வருகிறது. இத் தொகுப்பில் உள்ள கதைகள் அவர் மொழிபெயர்ப்புக் கொள்கையை நிரூபிக்கும் வகையில் உள்ளன. தான் படித்ததில் தேர்வு செய்தே, தமிழுக்குத் தேவை எது என உணர்ந்தே இதைச் செய்திருக்கிறார். மொழியாக்கத்துக்குரிய ஒழுக்கம் இதுதான். பெறுமொழியின் தற்கால ஸ்திதி, அதன் இருப்பு, தரு மொழியிலிருந்து பெறுமொழிக்கு ஆகி வந்த பின் ஏற்பட இருக்கும் பாதிப்புகள், விளைவுகள் இவைகளின் புரிதலே மொழியாக்கத்துக்கு அவசியப்படும் காரணிகள். நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத்தளம். மணல்களாக இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. சுப்புராய நாயகர் அதைச்செய்திருக்கிறார். · எழுத்தாளர் பிரபஞ்சன் இந்தத் தொகுப்பின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக அமைந்து வாசிப்பு அனுபவத்தைச் செழுமைப்படுத்துகின்றன. கலையின் மேன்மைகள் வித்தியாசங்களைத் தேடுவதில்தான் இருக்கின்றன என்பதை இந்தத் தொகுப்பு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தமிழுக்குப் பெரிதும் புதிதான இத்தகைய கதைகளைப் பிரெஞ்சு மொழியிலிருந்து தந்த நாயகரை தமிழ் வாசகர் உலகம் பாராட்ட வேண்டும். அவர் இப்பணியைத் தொடர்ந்தால் தமிழுக்கு நல்லது. · முனைவர் க.பஞ்சாங்கம்மேலும்
Author: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் | S.A.Vengada Soupraya Nayagar
Categories: மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் | Short Stories | Translation
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.