aganazhigai@gmail.com | +91 701 013 9184
சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் | S.A.Vengada Soupraya Nayagar
₹ 200.00
Description
நாயகர், தனது குருவான அத்தையம்மாவை நூலில் இலக்கியமாகப் பதிவு செய்துவிட்டார். அத்தையம்மாவிடம் இவர் படித்துக்கொண்ட பாடங்கள் இப்பவும் உதவுகிறது. அத்தையின் அடுத்த வளர்ச்சிதான் இந்தக் கதைகள். இவர்களை, இவைகளை எழுத்தில் பதிவு செய்து வைப்பதே …மேலும்
நாயகர், தனது குருவான அத்தையம்மாவை நூலில் இலக்கியமாகப் பதிவு செய்துவிட்டார். அத்தையம்மாவிடம் இவர் படித்துக்கொண்ட பாடங்கள் இப்பவும் உதவுகிறது. அத்தையின் அடுத்த வளர்ச்சிதான் இந்தக் கதைகள். இவர்களை, இவைகளை எழுத்தில் பதிவு செய்து வைப்பதே சரி. நாயகர் இதைத்தான் இங்கே பதிவு செய்திருக்கிறார். அவர் தந்த குரு காணிக்கை இது. - கி.ராஜநாராயணன் ‘அத்தை’ குறித்த நண்பர் நாயகரின் பதிவுகளைப் படித்து முடித்தவுடனே எனக்குள் எழுந்த சிந்தனைகள் இவை. ‘அல்லியங்கோதை’ என்று அழகான பெயரோடு கூடிய அன்பேமயமான அத்தைகள் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நண்பர் நாயகர் அவருக்கே உரிய எளிய மொழியில், இனிய மொழியில் தனது அத்தையின் வாழ்வை இந்நூலில் பதிவு செய்துவிட்டார். அந்த அத்தையின் வாழ்விற்கு ஒரு ‘நிரந்தரத் தன்மை’ கிடைத்து விட்டதாகவே நினைக்கிறேன். - முனைவர் பேரா. க.பஞ்சாங்கம் ‘அத்தையின் அருள்’ என ஒரு நூல் எழுதிக் கொண்டாடும் அளவுக்கு அன்பும் அரவணைப்பும் உள்ளவராக நாயகரின் அத்தை இருந்துள்ளார். அத்தை ‘யாரையும் பணிய வைக்கும் குரலும் எதற்கும் பால்மாறாத இயல்பும்...’ கொண்ட ஓர் ஆளுமை. அவர் வாழ்க்கை எழுதி வைப்பதற்கு உரியது. அத்தைக்கு நானும் ஒரு இரசிகன் ஆகிவிட்டேன்! “என் புள்ள எல்லாத்துலயும் முதல்லதான் வரணும்” எனச் சொல்லி மகனை அவையத்து முந்தி இருக்கச் செய்த அருமைத் தந்தைக்கும்தான்! - பேராசிரியர் த.பழமலய் சு.ஆ.வெ. நாயகரின் 'அத்தையின் அருள்’. தமிழில் அரிய வகை நூல்களில் ஒன்று. அல்லியங்கோதை கல்வியறிவற்றவர். ஆனால் செவிக்கல்வி நிறையவே இருக்கிறது. குடும்பப் பின்புலத்திலிருந்து புராணங்கள், நாட்டார் பாடல்கள், விடுகதைகள் என ஏராளமாகக் கற்றிருக்கிறார். அபாரமான கல்வி வேட்கைதான் அவரை இயக்கிய விசை. மொத்த நூலையும் இந்தக் கோணத்தில் வாசித்தால் தன்னை வளர்த்த அத்தை மேல் சு.ஆ.வெ. கொள்ளும் நெகிழ்ச்சிக்கு மேலாக முற்றிலும் புதிய ஒரு கதை கிடைக்கிறது. - எழுத்தாளர் ஜெயமோகன்மேலும்
Author: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் | S.A.Vengada Soupraya Nayagar
Categories: தன்வரலாற்றுக் கட்டுரைகள் | Autobiography | Essays
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.