aganazhigai@gmail.com | +91 701 013 9184
என்.சந்தியாராணி (கன்னடம்) } N.Santhiyarani (Kannada) - தமிழாக்கம்: கே.நல்லதம்பி | Tamil Translation: K.Nallathambi
₹ 180.00
Description
தனிப் பயணங்கள் வாழ்க்கையின் மீதான ஆழமான தேடல்களின் பொருட்டு உருவாகின்றன. அப்படித் தேடிச் செல்லும் உங்களை உலகம் கைப்பற்றி அழைத்துச் செல்கிறது. அதன் யதார்த்த, அழகிய, குரூர முகங்களைக் காட்டுகிறது. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பி…மேலும்
தனிப் பயணங்கள் வாழ்க்கையின் மீதான ஆழமான தேடல்களின் பொருட்டு உருவாகின்றன. அப்படித் தேடிச் செல்லும் உங்களை உலகம் கைப்பற்றி அழைத்துச் செல்கிறது. அதன் யதார்த்த, அழகிய, குரூர முகங்களைக் காட்டுகிறது. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கச் செய்கிறது. இப்படியான பயணங்களில், வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்ந்து அனுபவம் பெறுகிறோம். ‘புதுவை என்னும் புத்துணர்வு’ என்ற இந்நூல் வழமையான பயண நூலாக இடங்களைச் சுற்றிப் பார்ப்பதையும் அவற்றை வியத்தலையும் செய்யவில்லை. புதுச்சேரி என்ற நிலப்பரப்பின் வரலாறு, தொன்மைச் சிறப்புகள், அங்குள்ள மக்களின் வாழ்நிலை, பொருளாதாரம், சிக்கல்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், இரு வேறு எதிரெதிரான கலாச்சாரங்களின் இணைவு, இரு மொழிகளின் ஒருங்கிசைவுகள் எனப் பலவற்றை விளக்குகிறது. பயண இலக்கியமாக, புதுச்சேரியைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுகள், யதார்த்தமான குறிப்புகள், நடைமுறை ஆலோசனைகள் போன்றவற்றை செறிவான மொழிபெயர்ப்பில் வழங்கியதில் இந்நூல் சிறப்பு பெறுகிறது. - பொன். வாசுதேவன்மேலும்
Author: என்.சந்தியாராணி (கன்னடம்) } N.Santhiyarani (Kannada) - தமிழாக்கம்: கே.நல்லதம்பி | Tamil Translation: K.Nallathambi
Categories: பயண இலக்கியம் | Travologue
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.