aganazhigai@gmail.com | +91 701 013 9184
ராமசாமி மாரப்பன் | Ramasamy Marappan
₹ 700.00
Description
பிரெஞ்சு பாஷையில்தான் ரியலிஸம், நேச்சுரலிஸம், புது அலை முதலிய இலக்கியப் போக்குகள் உலக அளவில் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டன. புரட்சிக்கு முந்தைய ஆணாதிக்க பூர்ஷ்வா கலாச்சாரம் பெண்களை போகப்பொருளாக்கி அனுபவித்து வணிக ரீதியில் …மேலும்
பிரெஞ்சு பாஷையில்தான் ரியலிஸம், நேச்சுரலிஸம், புது அலை முதலிய இலக்கியப் போக்குகள் உலக அளவில் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டன. புரட்சிக்கு முந்தைய ஆணாதிக்க பூர்ஷ்வா கலாச்சாரம் பெண்களை போகப்பொருளாக்கி அனுபவித்து வணிக ரீதியில் விலை பேசி விற்க ஆட்டு மந்தைகளைப் போல் அடைத்து வைத்திருந்தது ரூஸோவின் சமத்துவச் சுதந்திரக் கோட்பாட்டில் அவிழ்த்துவிடப்பட்டு பாலியல் விடுதலை பெற்றது தலைகீழாக மாறி ஆண்களை ஆசை காட்டி மயக்கி, இஷ்டத்துக்குச் சோரம் செய்ய தள்ளிவிட்டதில் கற்பழிப்பு, கலவி முதலிய விபச்சார வியாபாரங்கள் காட்டாறு போல் பெருக்கெடுத்தன. புராதன ராணி செமிராமியின் நினாவே போல் பாரிஸ் பட்டணம் சம்போக மையக் கேந்திரமாகிவிட்டதில் கிஸீணீtஷீனீஹ், கிஸீtலீக்ஷீஷீஜீஷீறீஷீரீஹ், கினீஷீக்ஷீஷீus முதலிய கண்ணோட்டங்களில் காதல், கல்யாணம் முதலிய சமூகச் சம்பிரதாயச் சட்டங்கள் நெருப்பிலிட்டுப் பொசுக்கப்பட்டன. இப்படித் தான்தோன்றித் தனமான - தன்னிச்சையான தகாத உடலுறவு, கள்ளத்தொடர்பு இத்யாதி ஆடம்பரச் சல்லாபங்களை பிரதானப்படுத்தி மன்னன் சாலமோன் காலத்து ஸிஷீனீணீஸீநீமீ ஷீயீ tலீமீ ஸிஷீsமீ, கி ஞிணீனீsமீறீ வீஸீ ஞிவீs tக்ஷீமீss முதல் இன்று வரை ஏராளமான சிருஷ்டிகள் வந்துள்ளன. நினைத்த அழகிகளைப் போட்டுப் புரட்டி கி-ஞீ பூரண சரீர சுகம் நுகராமல் எந்த கதாநாயகி பாத்திரத்தையும் ஒரு ஆசிரியனால் தத்ரூபமாகச் சித்தரிக்க முடியவே முடியாது என்று ஒரு ஐரோப்பிய சித்தாந்தம் பிரகடனப்படுத்தப் பட்டதில் எண்ணற்ற குமரிகள், கல்யாணமான ஸ்திரீகள், கிழவிகள், மேல், கீழ் மட்டங்களிலிலிருந்து அதிபுத்திஜீவி எழுத்தாளர்களுக்கு வலை வீசி வலிய உடலின்பம் தந்து தங்களை முன்மாதிரியாக எழுத்தில் பார்க்க ஏங்கித் தவம் கிடந்தார்கள். 17, 18, 19 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் எப்படி பிரான்ஸ் சோஷலிஸ செக்ஸ் தேக சுகத்தில் நீந்தித் திளைத்தது என்பதை இந்த நூலில் சொல்லப்படும் நாவல்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பிரபல பிரெஞ்சு எழுத்தாளர்களான ராபிலஸ், வால்ட்டர், பல்ஸாக், ஸ்டெந்தால், விக்டர் ஹியூகோ, குஸ்டோவ் பிளாபர்ட், மாப்பஸான், அலெக்ஸாண்டர் டுமாஸ், எமிலி ஜோலா, ஆல்பர்ட் கேமு, ஜார்ஜ் சேண்ட், மோலியர் ஆகியோருடன் ஸ்கில்லர் (ஜெர்மனி), லூஸியஸ் அப்பூலியஸ், பெட்ரோனியஸ் (இத்தாலி) முதலியோரின் வாழ்க்கைச் சரிதங்களையும், அவர்களுடைய முக்கியப் படைப்புகளின் விரிவான சுருக்க வடிவங்களையும் இங்கே வாசிக்கலாம். இது தவிர, பண்டைய அரிஸ்டோபன்ஸ், அஸ்கிலஸ், யூரிபிடிஸ், சோபாகில்ஸ் ஆகிய நால்வரின் ஜீவிய சரித்திரங்களையும், அன்னார்களது புகழ்பெற்ற கிரேக்க ரோமன்ய இன்பவியல், துன்பவியல் நாடகங்களின் கதைகளையும், ஹோமரின் Ôஇலியட்Õ இதிகாஸத்திலிருந்து உருவப்பட்டு பொக்காஷியோ, சாஸர் கைவண்ணங்களையும் மீறி மெருகூட்டப்பட்டு எழுதி நடிக்கப்பட்ட ஷேக்ஸ்பியரின் ஒரே காதல் துரோக நாடகமான ‘ட்ராய்லஸ் அன்ட் கிரிஸிடா’ பற்றிய கட்டுரையையும் இந்நூல் கூடுதலாக இணைத்துக் கொள்கிறது. மொத்தத்தில் முழுமையான தகவல்களை உள்ளடக்கி வாசிப்புப் பேரனுபவத்தை அளிக்கும் இந்நூல் மூலத்தை தேடிப்பிடித்து படிக்கத் தூண்டும் ஒரு வழிகாட்டி போன்றது.மேலும்
Author: ராமசாமி மாரப்பன் | Ramasamy Marappan
Categories: விமர்சனம்
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.