aganazhigai@gmail.com | +91 701 013 9184
ராமசாமி மாரப்பன் | Ramasamy Marappan
₹ 400.00
Description
கற்பனாவாதம் எனப்படும் ‘ரொமாண்டிசிஸம்’ பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தில் முதலில் பிரிட்டனிலும் பிறகு ஜெர்மனி, ரஷ்யா முதலிய பிற தேசங்களிலும் விதைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பரவி முளைத்து வியாபித்துக் கிடக்கும் ஓர் உன்னத இலக்கிய இ…மேலும்
கற்பனாவாதம் எனப்படும் ‘ரொமாண்டிசிஸம்’ பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தில் முதலில் பிரிட்டனிலும் பிறகு ஜெர்மனி, ரஷ்யா முதலிய பிற தேசங்களிலும் விதைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பரவி முளைத்து வியாபித்துக் கிடக்கும் ஓர் உன்னத இலக்கிய இயக்கம். இதன் உச்சபட்ச பொற்காலம் 1780 - 1830 எனப்படுகிறது. ஆரம்பத்தில் இயற்கையைப் பாராட்டிப் போற்றிப் பின் அழகை ஆராதித்து கடைசியில் எளிமை, இனிமைகள், காதல், காமாந்தகங்கள், அமானுஷ்யங்கள், அதிபயங்கரங்களின் கலவை அம்சங்களாயின அதன் போக்குகள். கலைஞன் அந்நியன் - அவன் சமூகச் சட்டங்களுக்கு அடங்காதவன், அப்பாற்பட்டவன் - அடுத்தவன் மனைவியை அனுபவிக்கலாம், ஆசைநாயகிகளை வைத்துக்கொள்ளலாம், பொய் புரட்டுகள் சொல்லலாம், ஏன்? கொலை, கொள்ளைகளில் கூட ஈடுபடலாம் - ஆனால் அப்படி அடாவடி அட்டூழியங்களால் அவன் குற்றவாளி ஆக மாட்டான் என்கிற பொஹிமீயத்தனம் அதன் ஆணிவேர். வோர்ட்ஸ்வொர்த், கோலிரிட்ஜ், கீட்ஸ், ஷெல்லி, பைரன், ஸ்காட், கதே, புஷ்கின் ஆகியோர் கற்பனாவாதக் கலகக்காரர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இந்த எண்மரின் ஜீவிய சரித்திரம் மற்றும் அவர்கள் சிருஷ்டிகளின் சாரம்தான் இந்நூல். இடிப்பொடிந்த இன்றைய நவீன நோயுற்ற நிகழ்காலத்திலிருந்து, கடந்த இந்திர லோகம் போன்ற மகோன்னத ஆரோக்கியமான காலத்தைத் திரும்பிப் பார்த்த போது அதன் புகழின் பெருமூச்சு இதயத்தைச் சுத்திகரிக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் எதிர்காலம் என்ற சூன்யமயமான இருண்ட காலம் ஏதுமில்லை. •• நூலாசிரியர் ராமசாமி மாரப்பன், ‘சதுக்கப்பூதம்ஞ என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்தியவர். டி.எஸ்.எலியட்டின் ‘பாழ்நிலம்’, விளாடிமிர் நபக்கோவின் ‘லோலிதா’ ஹென்றி மில்லரின் ‘இரண்டாம் வட்டம்’ ஆகியவற்றை தமிழில் மொழிபெயர்த்தவர். நனவோடைக் காலம், ஃப்ராய்டும் பாலியலும், புதிர்வழி அரண்மனை(கள்) போன்ற விமர்சன நுல்களை எழுதியவர். ‘பித்தி’ என்ற கதைத் தொகுப்பும், ‘எ(தெ)ரியும் இரு கொல்லிக்கண்கள்’ கவிதைத் தொகுப்பும் இவருடையவை.மேலும்
Author: ராமசாமி மாரப்பன் | Ramasamy Marappan
Categories: விமர்சனம்
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.