aganazhigai@gmail.com | +91 701 013 9184
அகநாழிகை பதிப்பகம் மற்றும் இலக்கிய இதழ் 2009-ல் தொடங்கப்பட்டது. 1995 முதல் அகநாழிகை இலக்கிய அமைப்பாக பல்வேறு புத்தக அறிமுக, விமர்சனக் கூட்டங்கள், குறும்படத் திரையிடல் நிகழ்வுகள் போன்றவற்றை ஒருங்கிணைத்துள்ளது. சென்னை, சைதாப்பேட்டையில் 2013 முதல் 2015 வரை அகநாழிகை புத்தக விற்பனையகம் செயல்பட்டது. இலக்கியக் கூட்டங்கள், புத்தக அறிமுக நிகழ்ச்சிகள், விமர்சனம், திறனாய்வுக் கூட்டங்கள் என பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை அகநாழிகை நடத்தியுள்ளது.
அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகவும், இதழின் ஆசிரியராகவும் எழுத்தாளர் பொன். வாசுதேவன் செயல்பட்டு வருகிறார். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, வரலாறு, திரைப்படம், அரசியல் பொருளாதாரம், சூழலியல், மானுடவியல், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், நுண்கலைகள் என தமிழ் வாழ்வின் பல்வேறு படைப்பிலக்கியக் கூறுகளை உள்ளடக்கிய புத்தகங்களை அகநாழிகை வெளியிட்டு வருகிறது. தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களின் படைப்புகளையும், நம்பிக்கையூட்டும் பல புதிய படைப்பாளர்களின் அறிமுகப் படைப்புகளையும் அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.