சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்

Friday, October 21, 2011

அற்ற பொழுதுகள்



நீள்வெக்கையின் பேரோலத்தில்
தவித்துப் பொழிந்த
மழை பட்டுத் தெறிக்கிறது
காத்திருத்தலின் இதமான உஷ்ணம்

நழுவிக் கொண்டிருக்கும்
பொழுதுகளையெல்லாம்
சேகரிக்கிறது நீயற்ற அறையின் வெறுமை

இரவை நீளமாக்கி
பகலை கனவுகளாக்கி
சகதியில் காலழுந்த விரையும் ஈரக்குதிரையாய்
வெட்கத்தில் வழவழத்துச் சறுக்கி
விளையாடிக் கொண்டிருக்கிறது
கனிந்த நினைவுகள்

இரை செரிக்கும் பாம்பின் வன்மத்தோடு
சாதுர்யமாய் பிணைக்கிற
உன் நினைவுகளை
உடல் நெளியக் கிடத்துகிறேன்
மின்மினிகளாய் கண்ணில் நீயலைய.




பொன்.வாசுதேவன்

5 பின்மொழிகள்:

தமிழரசி said...

ஆக்கியழித்தலில் நீங்கள் சிவனோ என தோன்றுகிறது..வார்த்தைகள் அர்த்த செறிவோடு களமிறங்கி கவிதையில் சொன்னது போல் பட்டுத்தெறிக்கிறது படிக்கையிலும் ஒரு இதமான உஷ்ணம்..

//உன் நினைவுகளை
உடல் நெளியக் கிடத்துகிறேன்
மின்மினிகளாய் கண்ணில் நீயலைய.// வாசு மார்க் கவிதையின் அடையாளம் அத்தனை வரிகளிலும்..

கலகலப்ரியா said...

good one... :)

Vel Kannan said...

மிகவும் பிடித்திருக்கிறது வாசு

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நழுவிக் கொண்டிருக்கும்
பொழுதுகளையெல்லாம்
சேகரிக்கிறது நீயற்ற அறையின் வெறுமை
ஆழமான வரிகள்! மிகவும் ரசித்தேன் கவிதையை! இன்னும் பலவற்றை எதிர்பார்க்கிறேன். எனக்குப் பிடித்தமான மொழியில் உங்கள் நடை உள்ளது. பிரமிளின் முகப்பு வரிகள் எனது மிக விருப்ப வரிகள்! கவிதை உங்களுக்கு வாய்த்திருக்கிறது! அடிக்கடை வருவேன் ! தொடர வாய்ப்புத்தாருங்கள்!

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...