-
அகநாழிகை
பதிவுகள்
-
▼
2009
(113)
-
►
December
(10)
- புத்தக கண்காட்சியில் அகநாழிகை வெளியீடுகள்
- ‘குரலற்றவனின் குரல்‘ புத்தக வெளியீட்டு விழா
- உக்காந்து யோசிச்சது & நகுலன் வீட்டில் யாருமில்லை, ...
- இயேசுநாதரும் வாசுதேவனும்
- "ஞாநியின் பூச்செண்டு”
- அஞ்ஞாநியின் அராஜகம் - சாருநிவேதிதா
- கொண்டாடிச் செல்கிறேன் (வார்த்தை டிசம். 09)
- ஒரு வெளியீடும் பல பதிவுகளும்
- அகநாழிகை பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா
- அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்
-
►
December
(10)
எழுதிய தலைப்புகள்
சலிப்பற்ற திரள்தளில்
நுரைத்துக் கரை சேர்ந்த
வெற்று நீர்ப்பலூன்களை
சேகரித்துக் கொண்டிருக்கிறது
நெஞ்சக்கரை
ஆறுதல் போர்த்திய
துளிர்களின் மினுக்கலில்
ஆழ்மையுற்று நீண்டு
கிடக்கிறது காலம்
மாய்ந்த துயரங்களின்
கல்லறைகளில்
களிப்பை முகிழ்க்கிறது
உன் காலடித்தடங்கள்
இறுக்கத்தின் நுனியைக் கைப்பற்றி
காலப் பெருமழையின்
அடர் இருளில்
உற்று நோக்கி
சரிபார்த்துக் கொள்கிறேன்
என்னை நான்.
(உனக்காக)
- பொன்.வாசுதேவன்



22 Comments for ஆறுதல் சாயம்
தண்டோரா ...... | November 19, 2009
வழக்கம் போல் வாசு..அப்புறம் என்ன ஆளையே காணும்?
rajan RADHAMANALAN | November 19, 2009
எதோ மிஸ்ஸிங் ?
உயிரோடை | November 19, 2009
அப்பா என்ன ஒரு மொழி.
கவிதை நல்லா வந்திருக்கு.
புரிய கொஞ்சம் கடினமா இருக்கு.
இலக்கிய இதழ் எதற்காவது அனுப்பி இருக்கலாமே?
வாழ்த்துகள்
Muthusamy Palaniappan | November 19, 2009
கொஞ்சம் புரியலை. புரிந்தவை நன்றாக இருக்கிறது
Muthusamy Palaniappan | November 19, 2009
இம்மாதிரியான படங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?
Rajeswari | November 19, 2009
வார்த்தை பிரயோகங்கள் கவிதையை அழகாக்குகிறது.
ஆ.ஞானசேகரன் | November 19, 2009
படம் நல்லாயிருக்கும்,,, கவிதை புரியவில்லை கொஞ்சம் கடினமாக இருக்குங்க வாசு...
D.R.Ashok | November 19, 2009
:) photo :)
நிலாரசிகன் | November 19, 2009
முடிவு ரொம்ப நல்லா இருக்கு.மிகவும் பிடித்திருக்கிறது இக்கவிதை. வாழ்த்துகள் :)
அனுஜன்யா | November 19, 2009
எப்படி இப்படி ஒரு மொழி? நல்லா வந்திருக்கு வாசு.
அனுஜன்யா
கலகலப்ரியா | November 19, 2009
nice..!
பா.ராஜாராம் | November 19, 2009
அருமையான மொழி ஆளுமை வாசு.ரொம்ப,ரொம்ப பிடிச்சிருக்கு.
நேசமித்ரன் | November 19, 2009
நல்ல மொழியாழம் வாசு சார்
திரள்தளில் ? சரிதானா?
ஈரோடு கதிர் | November 19, 2009
படத்தை நீண்ட நேரம் ரசித்தேன்
ஸ்ரீ | November 19, 2009
கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு .
மாதேவி | November 19, 2009
படம் அழகு. கவிதையின் மொழி ஆளுமை வியக்கவைக்கிறது.
யாத்ரா | November 20, 2009
கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.
அகநாழிகை | November 20, 2009
தண்டாரோ (இதோ வந்துட்டேன் மணிஜி)
ராஜன் ராதாமணாளன் (சரியாத்தானே இருக்கு நண்பா..)
உயிரோடை (//இலக்கிய இதழ் எதற்காவது அனுப்பி இருக்கலாமே?// இது ரொம்ப ஓவடர்)
முத்துசாமி பழனியப்பன் (நன்றி முத்து. படங்கள் இணையத்தில் எடுத்ததுதான்)
ராஜேஸ்வரி (நன்றி தோழி)
ஆ.ஞானசேகரன் (நன்றி நண்பா)
டி.ஆர்.அஷோக் (டி.ஆர்.ன்றது சரியாத்தான் இருக்கு)
நிலாரசிகன் (புரிதலுக்கு நன்றி ராஜேஷ்)
அனுஜன்யா (நன்றி அனுஜி)
கலகலப்ரியா (நன்றி நண்பரே)
பா.ராஜாராம் (நன்றி பாரா)
நேசமித்ரன் (திரள்தலில் என வரவேண்டும். சுட்டியதற்கு நன்றி)
ஈரோடு கதிர் (ரசனைக்கு நன்றி நண்பரே)
ஸ்ரீ (நன்றி ஸ்ரீ)
மாதேவி (முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி)
யாத்ரா (நன்றி மாப்ளே)
அனைவருக்கும் நன்றி.. நன்றி.
- பொன்.வாசுதேவன்
அடலேறு | November 20, 2009
ரசனை கவிதை வாழ்த்துக்கள்
velji | November 20, 2009
நல்ல கவிதை.
வார்த்தைகளை வேறு வேறு வெளிகளில் எடுத்து,மொத்த உருவை தருவதில் வியப்பளிக்கிறீர்கள்.
கவிதை(கள்) | November 20, 2009
கவிதையின் ஆழமும் வரத்தை பிரயோக லாவகங்களும் மனதின் படிமத்தை செதுக்குகிறது.
வாழ்த்துக்கள்
விஜய்
getup | November 24, 2009
Post a Comment