Thursday, October 22, 2009

பலூன் பிரியம்



ஆதிச்சுதந்திரத்தின் அலைதல் வெறுத்து
குழந்தை கைத்தழுவலுக்கேங்கி
அடைபட்டுக்கிடக்கும்
காற்றடைத்த
விற்காத பலூன்களோடு

நடை சலிக்காமல்
சாலை வெயிலில் சுற்றித்திரியும்
வறண்ட கண் கொண்ட
பலூன் விற்பவனின்
கைவிரல் தேய்த்தலில்
‘ப்யூப்‘ ‘க்யூப்‘பென ஒலியெழுப்பி
போகுந்திசை நோக்கி

அப்பாவின் பேரன்பும்
பிரியத்தின் இதழ் மலரும்
அந்தி தருணத்திற்காய் காத்திருக்கும்
காயத்ரியின் ஞாபகத்தில்

பதியனாய் அமர்ந்து கொள்கிறது
மறுமுறை பலூன்காரன் வருவதற்குள்
பலூன் வாங்கி விடுவதற்கான விருப்பம்.


- பொன்.வாசுதேவன்

நன்றி : உயிரோசை இணைய இதழ்



33 பின்மொழிகள்:

உயிரோடை said...

க‌விதை அருமை வாசு.

//ஆதிச்சுதந்திரத்தின் அலைதல் வெறுத்துகுழந்தை கைத்தழுவலுக்கேங்கி அடைபட்டுக்கிடக்கும் காற்றடைத்தவிற்காத பலூன்களோடு //

எப்ப‌டி இவ்வ‌ள‌வு அழ‌கான‌ சிந்த‌னைக‌ளை கோர்க்க‌ முடியுது உங்க‌ளாலே? அருமை வாசு.

//நடை சலிக்காமல்சாலை வெயிலில் சுற்றித்திரியும்வறண்ட கண் கொண்டபலூன் விற்பவனின்//

உண‌ர்வு பூர்வ‌ம். அழ‌கு. காட்சியை ப‌ட‌ம் பிடிக்கும் க‌விதை.

//கைவிரல் தேய்த்தலில்‘ப்யூப்‘ ‘க்யூப்‘பென ஒலியெழுப்பிபோகுந்திசை நோக்கி//

காட்சியை ம‌ட்டும‌ல்ல‌ கேட்ப‌தையும்(ஒலி) க‌விதையாக்குவ‌து விந்தையான‌ விச‌ய‌ம்.


//பதியனாய் அமர்ந்து கொள்கிறதுமறுமுறை பலூன்காரன் வருவதற்குள்பலூன் வாங்கி விடுவதற்கான விருப்பம் //

விருப்ப‌த்தை செடி போல‌ பாவிப்ப‌து முன்பே ஒரு க‌விதையில் ப‌டித்திருக்கின்றேன்.

என்னால் இப்ப‌டி எழுத முடிய‌வில்லையே என்ற‌ ஏக்க‌ம் வ‌ர‌வ‌ழைக்கும் க‌விதை.

தண்டோரா ...... said...

இப்படி எழுதவேண்டும் என்ற ஊக்கம் வரவழைக்கும் கவிதை..வாசு நன்றாக இருக்கிறது

அகநாழிகை said...

வித்யாசமான இரசனைக்கு
நன்றி உயிரோடை

அகநாழிகை said...

நன்றி தண்டோரா.

ஹேமா said...

வாசு அண்ணா கவிதையின் மொத்த ஏக்கமும் கடைசிப் பந்திக்குள் குந்திவிட்டது.வாழ்துக்கள்.

T.V.Radhakrishnan said...

அருமை வாசு

அகநாழிகை said...

நன்றி ஹேமா.

அகநாழிகை said...

நன்றி, TVR அய்யா.

நேசமித்ரன் said...

அருமையான கவிதை
இறுக்கம் சொற்களில் அழுத்தம் பொருளில்
கவித்துவம் விரவுகிறது வாசிப்போனுக்கு

கதிர் - ஈரோடு said...

//‘ப்யூப்‘ ‘க்யூப்‘//

படிக்கும் போதே லேசாய் காது கூசுகிறது

கவிதை அருமை

அகநாழிகை said...

நன்றி நேசமித்ரன்

அகநாழிகை said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கதிர்

மண்குதிரை said...

ellorum sollivittaarkal

nalla irukku sir.

நர்சிம் said...

அருமை.

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையாய் இருக்கிறது வாசு..

அகநாழிகை said...

@ மண்குதிரை
@ நர்சிம்
@ கார்த்திகைப்பாண்டியன்

அனைவருக்கும் நன்றி

சென்ஷி said...

அருமையான கவிதை..

//‘ப்யூப்‘ ‘க்யூப்‘பென ஒலியெழுப்பி
போகுந்திசை நோக்கி//

உங்க வரிகள் ஏற்படுத்தின சப்தம் சீக்கிரம் அடங்காது போல இருக்குது வாசு!

ஸ்ரீ said...

அழகான கவிதை.அருமை.

velji said...

கீழிருந்து மேல் நோக்கினால் குழந்தையின் விருப்பத்தில் ஆரம்பித்து நூல் பிடித்து ஆதிச்சுதந்திரம் வரை பறக்கிறது பலூன்.

வேறென்ன சொல்ல...அருமை!

அகநாழிகை said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சென்ஷி.

அகநாழிகை said...

நன்றி ஸ்ரீ.

அகநாழிகை said...

வருகைக்கு வித்தியாசமான கோணத்தில் கவிதையை அணுகியதற்கும் நன்றி வேல்ஜி.

பா.ராஜாராம் said...

மிக அருமையான கவிதை வாசு.

//அப்பாவின் பேரன்பும்
பிரியத்தின் இதழ் மலரும்
அந்தி தருணத்திற்காய் காத்திருக்கும்
காயத்ரியின் ஞாபகத்தில்//

இன்னதென அறுதியிட இயலாத உலகிற்கு இட்டு செல்லும் காட்சியாக இருந்தது.

//
பதியனாய் அமர்ந்து கொள்கிறது
மறுமுறை பலூன்காரன் வருவதற்குள்
பலூன் வாங்கி விடுவதற்கான விருப்பம்//

அபாரமான மனநிலை சார்ந்த முத்தாய்ப்பு!

அகநாழிகை said...

நன்றி பா.இராஜாராம்

Nundhaa said...

மிக அருமை

அ.மு.செய்யது said...

கவிதை வெகு அருமை வாசு..கடைசி நான்கு வரிகள்....ப்ப்ச்ச்...

வால்பையன் said...

பொய் சொல்ல விருப்பமில்ல!

எடை நிறைந்த சொற்கள் எனக்கு சரியான புரிதலை தரவில்லை!
ஒவ்வோரு வரிகளுகிடையிலும்
தொடர்பற்று போனவனாய்
இருக்கிறேன்!
மழுங்கி போன
மூளையோ,
ஏன் புரியனும் என்ற
மமதையோ காரணமாக
இருக்கலாம்
ஆயினும் வாசுவுக்கு
என் ஆதரவு
என்றும் உண்டு!

ஆ.ஞானசேகரன் said...

டெம் பிளேட் நல்லாயிருக்கு

வேல் கண்ணன் said...

உயிரோடை சொன்னது
//காட்சியை ம‌ட்டும‌ல்ல‌ கேட்ப‌தையும்(ஒலி)
க‌விதையாக்குவ‌து விந்தையான‌ விச‌ய‌ம்.//
ஹேமா சொன்னது
//கவிதையின் மொத்த ஏக்கமும் கடைசிப் பந்திக்குள்//
நேசமித்ரன் சொன்னது.
//இறுக்கம் சொற்களில் அழுத்தம் பொருளில்
கவித்துவம் விரவுகிறது வாசிப்போனுக்கு//
பா.ரா சொன்னது
//இன்னதென அறுதியிட
இயலாத உலகிற்கு
இட்டு செல்லும் காட்சியாக
இருந்தது.//
இப்படியாக வழிமொழிகிறேன்
(நினைத்ததை சொல்ல இப்படி
நண்பர்கள் வேண்டும் வாசு நமக்கு)

என்.விநாயகமுருகன் said...

ந‌ல்ல இருக்கு. நான் பீச்சில் பலூன் சுடுவதை ஒரு கவிதையாக எழுதியிருந்தேன். ஆனா‌‌‌ல் இ‌து போன்ற ஆதிச்சுதந்திரம் அந்த கவிதை வரிகளில் இ‌ல்லை. அருமை

அகநாழிகை said...

@ நந்தா
@ அ.மு.செய்யது
@ வால்பையன்
@ ஆ.ஞானசேகரன்
@ வேல்கண்ணன்
@ விநாயகமுருகன்

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

சிறப்பான கவிதை.

ச.முத்துவேல் said...

மொழியும், கவித்துவமும் பொறாமை ஏற்படுத்துது ஆசிரியரே(பின்ன, அதானுங் உங் பேரு)

ரொம்ப நல்லாயிருக்குது.

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...