பளிச்சென இருக்கும் சட்டையை
கவனமாக இஸ்திரி கலையாமல்
காற்சட்டைக்குள் திணித்து
உடுத்திச் சரி செய்து புறப்படு.
சாலையோரக் கடையில்
தேநீர் அருந்தியதும்
பிளாஸ்டிக் குவளையை
வீசியெறிவதற்கு முன்பாக
அருகில் குப்பைத்தொட்டி
இருக்கிறதாவென தேடு.
உணவருந்தி முடித்ததும்
மறக்காமல் பரிமாறுபவனிடம்
மென்காகிதம் கேட்டு
வாயோரங்களை துடைத்து
கசக்கித் தட்டில் போடு.
வெயில் அதிகம்தான் என்றபடி
மறவாமல் அடிக்கடி
கைக்துண்டெடுத்து
முகத்தை ஒற்றியெடு.
பசி பாவனை செய்து
குழந்தையுடன் பிச்சை கேட்டு
கையேந்தும் பெண்ணுக்கு
காசு தானம் செய்.
எழுத்தின் மேன்மையைவிட
அதன் ஆளுமையே என்னை
ஈர்க்கிறது என்று
தலையிலடிக்காமல் சத்தியம் செய்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
போகிற வலைப்பக்கத்திலெல்லாம்
அருமை.. நன்றாக இருக்கிறது..
வாழ்த்துக்கள் என
ஏதாவது ஒரு பின்னூட்டத்தை
தேர்ந்தெடுத்து இடு.
எல்லோரும் ஆதரித்துப்
பேசுகையில்
என் கருத்து இதுதான் என்று
எதிர்கருத்தை முன்வை.
அவர் ரொம்ப நல்லவர்
நீங்க ரொம்ப நல்லவர்
நாங்க ரொம்ப நல்லவங்க
நீங்க ரொம்ப நல்லவங்க
என நிரம்பும் கூக்குரல்களைக்
கேட்டு மகிழ்.
கேட்டுப் புளகாங்கிதமடைந்து
உள்ளுக்குள் சிரித்துக் கொள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
23 பின்மொழிகள்:
இதில் ஏதும் உள்குத்து, அரசியல் இருக்காண்ணே...
”போகிற வலைப்பக்கத்திலெல்லாம் அருமை.. நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் என ஏதாவது ஒரு பின்னூட்டத்தை தேர்ந்தெடுத்து இடு.”
இப்போ இந்த கவிதை 'நல்லா இருக்கு'ன்னு எப்படிங்க சொல்லறது :)
மனம் விந்தையானது. அது காட்டும் சித்திரங்களை அழகாய் படம் பிடித்துயிருக்கிறீர்கள். எளிமை. இனிமை.
அன்புடன்
D.R. அசோக்
கேட்டுப் புளகாங்கிதமடைந்து
உள்ளுக்குள் சிரித்துக் கொள்.]]
ஹா ஹா ஹா
சத்தம் கேட்டுடிச்சோ ...
உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் இல்ல.. நெத்தியடிதான்..
அப்புறம்..
கவிதை நல்லா இருக்கு வாசு..:))))
//உள்ளுக்குள் சிரித்துக் கொள்.//
இப்போ புன்னகைக்கிறேன்.
:)
-வித்யா
கலையாத சித்திரம் ஒன்றை அற்புதமாகப் படைத்து இருக்கிறீர்கள்.
சமூக அக்கறையைச் சொல்லும் வரிகள். எழுத்தின் மேன்மையை விட ஆளுமை சொல்லும் வரிகள் அசத்தல்.
பாராட்டுகள் மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தரும் எனச் சொன்னவிதம் சிறப்பு. அருமை.
suupppeeeerrrrrrrrrr...
நானும் ஒரு நற்சித்திரம்தானோ...
//நேரம் கிடைக்கும்போதெல்லாம் போகிற வலைப்பக்கத்திலெல்லாம் அருமை.. நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் என ஏதாவது ஒரு பின்னூட்டத்தை தேர்ந்தெடுத்து இடு.//
அருமை...
//பசி பாவனை செய்து
குழந்தையுடன் பிச்சை கேட்டு
கையேந்தும் பெண்ணுக்கு
காசு தானம் செய்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
போகிற வலைப்பக்கத்திலெல்லாம்
அருமை.. நன்றாக இருக்கிறது..
வாழ்த்துக்கள் என
ஏதாவது ஒரு பின்னூட்டத்தை
தேர்ந்தெடுத்து இடு.//
வாசு அண்ணா போலியில் முழுகிக் கிடக்கும் வாழ்வு பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.நான் இதையே என் உங்களுக்கான பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள்.
:)
-priyamudan
sEral
போகிற வலைப்பக்கத்திலெல்லாம் அருமை.. நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் என ஏதாவது ஒரு பின்னூட்டத்தை தேர்ந்தெடுத்து இடு.
ஏதும் உள்குத்தா???
வாசு சார்
இப்படி புரியிற மாதிரி எழுதுனா பார்க்க எம்புட்டு சந்தோசமா இருக்கு!
nijamagave kavithai nermayai ,nijamaai ,aazamaai, vaarthai bavanaikal inri aarokiyamai amainthu irukirathu arumai.
///நேரம் கிடைக்கும்போதெல்லாம் போகிற வலைப்பக்கத்திலெல்லாம் அருமை.. நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் என ஏதாவது ஒரு பின்னூட்டத்தை தேர்ந்தெடுத்து இடு.///
ஆஹா அருமை
//அருந்தியதும் பிளாஸ்டிக் குவளையை வீசியெறிவதற்கு முன்பாக அருகில் குப்பைத்தொட்டி இருக்கிறதாவென தேடு.//
சுற்று சூழலின் மீது உங்களின் அக்கறையை காட்டுகிறது
கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
நெம்ப நல்லாருக்கு..... ஆனா இதெல்லாம் நடைமுறைக்கு வருமான்னு தெரியல......
அருமை.. நன்றாக இருக்கிறது..
வாழ்த்துக்கள் :-)
ரைட்டு..புரிந்துவிட்டது..
அருமை.. நன்றாக இருக்கிறது..
:)
//எழுத்தின் மேன்மையைவிட அதன் ஆளுமையே என்னை ஈர்க்கிறது என்று தலையிலடிக்காமல் சத்தியம் செய்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் போகிற வலைப்பக்கத்திலெல்லாம் அருமை.. நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் என ஏதாவது ஒரு பின்னூட்டத்தை தேர்ந்தெடுத்து இடு//
yenna sir ippadi solleetteenga....
naan ippo yenna sollurathu?
:)
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...