
விரும்பிச்செய்த
தவறுகளின் கணங்களை
துழாவிக் கொண்டிருக்கிறது மனம்
இரைச்சல் அமைதி
இனிமை துயரம் என
தீராத உணர்வுகளால் நிரம்பியவை
அத்தவறுகள்
தவறுகளின் சாயல்
எல்லோருள்ளும் பூசப்பட்டிருக்கிறது
படர்ந்து கொள்ள ஆள் தேடி
தனித்து விடப்பட்டிருக்கும் தவறுகள்
காற்றில் எப்போதும் அலைந்தபடியிருக்கின்றன
தவறுகளின் நிழலில்
இளைப்பாறுதல் இல்லாமல்
ஒரு வாழ்வைக் கடப்பது
எவ்வளவு கடினம் என்பது
நீங்கள் அறிந்ததுதானே
ஒருவருக்கும் தெரியாமல்
அல்லது அவ்வாறெண்ணி
நீங்களும் செய்திருக்கக்கூடும்
அவரும் செய்ததுதான்
எல்லோரும் செய்வதுதான்
பல தவறுகளைச் செய்த பிறகும்
தவறுகளை தவறாகவே
நீங்கள் பார்ப்பது ஏன்
ஒரு அடையாளத்திற்காகத்தான்
இதை தவறு என்று
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
மற்றபடி
அது சரியாகவும் இருக்கலாம்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
29 பின்மொழிகள்:
கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது, அருமை.
//பல தவறுகளைச் செய்த பிறகும்
தவறுகளை தவறாகவே
நீங்கள் பார்ப்பது ஏன்
//
அட....
-ப்ரியமுடன்
சேரல்
வாசு அண்ணா கவிதை தவறே இல்லாமல்.தவறை தவறு என்று உணர்ந்தபின்னும் தவறு செய்வதுதான் தவறு.
sariyana onnu, oru poo,mazhai etc., itha azga katrathu pola thavaru kooda ippo azhaga than therethu.
//ஒரு அடையாளத்திற்காகத்தான்
இதை தவறு என்று
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
மற்றபடி
அது சரியாகவும் இருக்கலாம்.//
உண்மை
//பல தவறுகளைச் செய்த பிறகும்
தவறுகளை தவறாகவே
நீங்கள் பார்ப்பது ஏன்//
பிடிச்சுப்போயி யோசிச்சுட்டு இருக்கேன் சார்
//ஒரு அடையாளத்திற்காகத்தான்
இதை தவறு என்று
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
மற்றபடி
அது சரியாகவும் இருக்கலாம்.//
wow...super.
அடையாளம் காட்டி இருப்பது ரொம்ப அழகு.
-வித்யா
நீண்ட கட்டுரையின் சுருக்க வடிவம் போல இருக்கிறது இந்தக் கவிதை
அசத்தல்.
நச்சுன்னு இருக்குக்குங்க...
ஏறக்குறைய இருவரும் ‘தவறிலேயே’ அண்மையில் எழுதியிருக்கிறோம் என்பதே ஒரு ஆச்சரியம் எனக்கு.
பல தவறுகளைச் செய்த பிறகும்
தவறுகளை தவறாகவே
நீங்கள் பார்ப்பது ஏன்
நல்ல கேள்வி
அருமை வாசு சார்
தவறு என்பதே தவறிச் செய்வதுதானே... திருத்திக் கொண்டால் போச்சு....
நல்லா இருக்கு வாசு சார்.
அருமை!
வழக்கம்போல் வாசு...
அன்புடன் தண்டோரா..
அருமையாக வந்திருக்கு. உரையாடல் போன்ற தொனியைக் தவிர்த்து, இன்னும் வாத்தைகளில் சிக்கனம் இருந்தால் கவிதை வேறொரு தளத்துக்கும் சென்றிருக்குமோ எனத் தோன்றுகிறது நண்பரே!
//பல தவறுகளைச் செய்த பிறகும்
தவறுகளை தவறாகவே
நீங்கள் பார்ப்பது ஏன்//
நல்லவன் வேஷம் போடத்தான்!
சொல்ல வந்த கருத்து ரொம்ப பிடிச்சிருக்கு.. ஏன்னா தவறை தவறில்லன்னும் சொல்லலாம்ன்னு சொல்லிட்டீங்களே.. தவறே செய்யாத ஆளு இல்லயே .. ஹப்பாடான்னு தப்பிக்கலாம் போலயே இந்த விசயத்தை சரின்னு ஒத்துக்கிட்டா.. :)
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//
சார் ...
கவிதை அருமை.
////பல தவறுகளைச் செய்த பிறகும்
தவறுகளை தவறாகவே
நீங்கள் பார்ப்பது ஏன்////
கவிதைக்குள் ஒரு கேள்வி.....
அருமையான கவிதை... அழகான வரிகள்...
வாழ்த்துக்கள் அண்ணா....
இதத்தான் சட்டத்தில இருக்கிற ஓட்டைனு சொல்றோமோ :-)
//ஒரு அடையாளத்திற்காகத்தான்
இதை தவறு என்று
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
மற்றபடி
அது சரியாகவும் இருக்கலாம்.//
ரொம்பப் பிடிச்சுருக்கு
அழகான அழகு கவிதைபா...
ரொம்ப அழகா எழுதிருக்கீங்க!
//தவறுகளின் சாயல்
எல்லோருள்ளும் பூசப்பட்டிருக்கிறது//
ஆம் மிகச்சரி.
//தவறுகளின் நிழலில்
இளைப்பாறுதல் இல்லாமல்//
எப்படி இவ்வளவு நேர்மை உங்களிடம்
//பல தவறுகளைச் செய்த பிறகும்
தவறுகளை தவறாகவே
நீங்கள் பார்ப்பது ஏன்//
பல முனைப்பை தருகின்றன இந்த வரிகள். இவன் இப்படி தான் என்ற பார்ப்பதை குறிப்பிட்டும் இருக்கலாம். அல்லது உங்கள் முதுகு உங்களுக்கு தெரிகின்றதா என்று கேட்பது போல கேட்டும் இருக்கலாம்.
எளிமை,
அழகு,
சொல்லாமல் சொல்லும் ஆழ்ந்த பதில்,
அற்புதம் வாசு.
ரொம்ப அருமையாய் வந்திருக்கு வாசு அண்ணா...போற போக்கில் "பிளக்கிற" வரிகள்.அற்புதம்!
remba pidichchirukkunga.....:)
அருமை அருமை அருமை.
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...