
சிறு மழை பெரு மழை
அடை மழை இடி மழை
புயல் மழையென
அடிக்கடி பெய்து கொண்டுதானிருக்கிறது
உனக்கு எனக்கு எல்லோருக்குமாக
மழை பெய்வது குறித்து
கவலையோடும்
கவலையேதுமற்றும்
நனைந்து மகிழ்ந்தும்
கவனமாய் நனையாமலும்
சென்று கொண்டிருக்கின்றோம்
நீ நான் எல்லோரும்
உனக்கும் எனக்கும் எல்லோருக்கும்
சேருமிடமொன்று இருக்கின்றது
பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
20 பின்மொழிகள்:
//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.//
வார்த்தைகள் நல்லா இருக்கு,ஆனா கொஞ்சம் புரியலையே...!
வாசு அண்ணா,நாம் விரும்பியோ விரும்பாமாமலோ வாழ்வை அது அடிக்கும் திசையிலே போகவேண்டித்தானே உள்ளது.
தொடர் மழையின் தூவானமாய் என் சிறிய பின்னூட்டம்,,இறக்கைகள் விரித்து நனைய சொல்கிறது....மெல்ல நனைகிறேன்..கூடவே மனசும்.-"ஜெரி".
அழகான மழை தொடர் மழை
இறுக்கிய கைகளுக்குள் இருக்கும் நனையாத விரல்களை மிகவும் ரசித்தேன்.
தூறலில் நனைந்த சுகம் வாசு...
அண்மையில் வாசித்ததில் ரசித்த கவிதை, அருமை.
//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்
ரசித்தேன்
மழை என்னைக்குமே மறக்கமுடியாது
தொடர்மழையும் நற்சித்திரமும் நன்றாக இருக்கின்றன வாசு
’தொடர்மழை’ ’நற்சித்திரம்’ இரண்டும் நான் எழுதியதை போல உணர்ந்தேன்.
(தவறாக எண்ண வேண்டாம்)
நல்லாத்தான் போய்க்கிட்டிருந்திச்சு. ஆனா கடைசியிலே உங்க ட்ரேட் மார்க்கை வைச்சுப்பிட்டீங்களே...
ரொம்ப நல்லா இருக்கு வாசு அண்ணா..
படமும் கவிதையும் இழைகிறது.
//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.//
அழகு.
உங்களுக்காண செய்தி என் பக்கம் வந்துவிட்டு செல்லுங்களேன்
மழையில் கையையும் கைவிரல்களையும் விரித்துக் கொணடு நனைபவள் நான்!
//.. மிஸஸ்.தேவ் said...
//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.//
வார்த்தைகள் நல்லா இருக்கு,ஆனா கொஞ்சம் புரியலையே...! ..//
எனக்கும் தான்..
//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்//
nalla uvamai...
kaikal korkka mudiyaatha yaekkaththin velippaadaakave unarkiren....:))
//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்//
nalla uvamai...
kaikal korkka mudiyaatha yaekkaththin velippaadaakave unarkiren....:))
//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்//
nalla uvamai...
kaikal korkka mudiyaatha yaekkaththin velippaadaakave unarkiren....:))
//பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்து
சென்று கொண்டிருக்கிறேன் நானும்//
nalla uvamai...
kaikal korkka mudiyaatha yaekkaththin velippaadaakave unarkiren....:))
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...