
மரணத்தைப் பற்றிய இதுவரை
எழுதியதையெல்லாம் தயை கூர்ந்து
திருப்பிக் கொடுத்து விடுங்கள்
இல்லையெனில் மறந்து விடுங்கள்
மரணத்தைப் பற்றி அனுபவித்தறியாது
அதை உங்களுக்கு விவரிப்பது
எவ்வளவு போலியானது
வெட்டுப்படப் போவதறியாது
மழையில் நனைந்தபடி
தழையை ரசித்துச் சுவைக்கும்
ஆட்டின் உடலுதறலை
சொல்வது போலல்லவா அது
வாழ்வைச் சலித்த
கடைசிக் கணங்களில்
ஒரு அழுகையில்
மன இறுக்கத்தில்
உணர்த்திவிட இயலாத
மரணம் குறித்து
சொல்வதிலிருந்து
நான் விடைபெற்றுக் கொள்கிறேன்
மரம் இறுகிக் கல்லாகக்
கிடக்கின்ற வழிப்பாதையில்
வந்து கொண்டிருக்கும்
நீங்களே சொல்லுங்கள்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
22 பின்மொழிகள்:
கவிதைக்கு பொய்யழகு. ஆனால்
இக்கவிதை உண்மையே பேசுகிறது பாசாங்கு இல்லாமல். நன்று
:) நல்ல கவிதை.
உரையாடல் - போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
:)
வித்யா
அருமைங்க.
வாழ்த்துக்கள் வாசு..
Happy Holidays..
வெட்டுப்படப் போவதறியாது
மழையில் நனைந்தபடி
தழையை ரசித்துச் சுவைக்கும்
ஆட்டின் உடலுதறலை
சொல்வது போலல்லவா அது
வாழ்வைச் சலித்த
கடைசிக் கணங்களில்
ஒரு அழுகையில்
மன இறுக்கத்தில்
உணர்த்திவிட இயலாத
மரணம் குறித்து
சொல்வதிலிருந்து
நான் விடைபெற்றுக் கொள்கிறேன்
இந்த வரிகளிலேயே அடங்கி விடுகிறது சாமி நீங்க சொல்ல வந்தது எல்லாம்
அழகான வரிகள்.
மரணம் பற்றி அறியாமல் பேசுதல் போலியானதுதான். ஆனால் இந்தக் கவிதை அசலானது. நல்லாருக்கு வாசு சார்.
உரையாடல் சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துகள்.
எப்போ வெச்சுக்கலாம்... எப்படி வெச்சுக்கலாம் பார்ட்டியை...
என்னோமோ போங்க ..கொன்னுடீங்க ..
அருமை அருமை
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்
\\வெட்டுப்படப் போவதறியாது
மழையில் நனைந்தபடி
தழையை ரசித்துச் சுவைக்கும்
ஆட்டின் உடலுதறலை
சொல்வது போலல்லவா அது\\
இணையான உதாரணம்.,
வாழ்த்துக்கள்
///வெட்டுப்படப் போவதறியாது
மழையில் நனைந்தபடி
தழையை ரசித்துச் சுவைக்கும்
ஆட்டின் உடலுதறலை
சொல்வது போலல்லவா அது///
ரொம்ப பிரமாதமாயிருந்தது உங்கள் கவிதை....
வாழ்த்துக்கள் அண்ணா.....
சிறுகதைபோட்டி வெற்றிக்கு வாழ்த்துக்கள். வாசு.
விடை பெற்றுக் கொ'ல்'கிறாய் வாசு.
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.
அண்ணா உண்மையான வரிகள்.வாழ்வோ சாவோ உணர்ந்தபின் எழுதினால் அங்கு உணர்வின் வரிகளைக் காணலாம்.
ஒரு விடயத்தைச் சொல்லி உணர்வதற்கும் பட்டு உணர்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.
வாழ்த்துக்கள்.
அனுபவபூர்வமான விடைபெறல்.நல்லா வந்திருக்கு வாசு அண்ணா.உரையாடல் சிறுகதை போட்டி-வெற்றிக்கு வாழ்த்துக்களும்!அன்பு நிறைய..
கவிதை ரொம்பவும் நல்லா இருக்கு.
உரையாடல் சிறுகதை போட்டி வெற்றிக்கு வாழ்த்துகள்,
நான் அந்தக் கதையை படித்து விட்டு,உங்களுடன் உணர்வுமயமாக பேசிக் கொண்டிருந்த அந்த இரவு நினைவுக்கு வருகிறது.
வெட்டுப்படப் போவதறியாது
மழையில் நனைந்தபடி
தழையை ரசித்துச் சுவைக்கும்
ஆட்டின் உடலுதறலை
சொல்வது போலல்லவா அது
_____________________________________நன்று
கவிதை அருமை.
உரையாடல் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
போட்டி முடிவு என்று வெளியானது, அந்த வலைமனை முகவரி யாரேனும் தர முடியுமா?
நல்ல கவி வரிகள்...
//வெட்டுப்படப் போவதறியாது
மழையில் நனைந்தபடி
தழையை ரசித்துச் சுவைக்கும்
ஆட்டின் உடலுதறலை
சொல்வது போலல்லவா அது//
மிகவும் ரசித்து வாசித்த வரிகள்.குறிப்பாக "உடலுதறல்" கவனமாக எடுத்தாளப்பட்ட பகுதி.
கவிதை நன்றாக இருக்கிறது வாசு.
அழகு....! அருமை....!! வாழ்த்துக்கள்....!!
அருமையான கவிதை. மிகவும் அற்புதம்.
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...