
நிரம்பிய கோப்பையானாலும்
வழியவில்லையேவென
வருத்தம் தொக்கி நிற்கிறது
கலயங்களில் குவித்தும்
சேர்க்காத செல்வம் குறித்த
பிரியம் விரிந்தழைக்கிறது
சலிக்காமல் தழுவியும்
மறுபடி மறுபடி மனமேங்குகிறது
மழலைக் கொஞ்சலுக்காய்
புணர்ச்சி முடிதலின்
கடைசிக்கணங்களில்
மறக்காமல் துளிர்க்கிறது பெருங்காமம்
வற்றாத சுனையொன்றின்
நீர் சொறி காம்புகளை
கௌவியபடி அடிமனதில் எப்போதும்
மிதந்து கொண்டேயிருக்கிறது தாகம்
காலம்தோறும் அப்படித்தான்
இருக்கிறதென்பதை யாரேனும்
உரக்கச் சொல்லிவிடுங்களேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
34 பின்மொழிகள்:
புணர்ச்சி முடிதலின்
கடைசிக்கணங்களில்
மறக்காமல் துளிர்க்கிறது பெருங்காமம்///
அட அட என்ன அருமையான வரிகள் சூப்பர் தலைவரே ..
கவிதையும் அருமை...
வாசு...விஸ்கிக்கு உங்க கவிதையை தொட்டுகிட்டு இருக்கேன்..
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்....
//தண்டோரா said...
வாசு...விஸ்கிக்கு உங்க கவிதையை தொட்டுகிட்டு இருக்கேன்..//
எதத்தானா சொல்றது கவிதையிலே ஒரு கிக் இருக்கென்னு
தீர்ந்து விடும் என்ற தவிப்பில்
ஊற்றாமலே வைத்திருக்கிறேன்.
கடைசி கையிருப்பை...
இருந்த மயக்கத்தையும்
பிடுங்கி கொண்டது உன் வரிகள்..
கடை பையன் இருந்தால் ..சரக்கு
கொடுத்தனுப்பு..அது வரை கவிதைக்கு..
தடா...
கவிதை சூப்பர்
come to page
//கலயங்களில் குவித்தும்
சேர்க்காத செல்வம் குறித்த
பிரியம் விரிந்தழைக்கிறது//
உண்மை...
மொழியில் விளையாடுகிறீர்கள்.எனக்கு ரொம்பப் புடிச்சுருக்கு.
இந்தத் தீராத்தன்மைதான் இயங்கு சக்தி.ஆக்க சக்தி. ஆனால், எப்போது, எவையவை தீர்ந்துபோகவேண்டும் எனபதில் நம் வாழ்வு இருக்கிறது.
வாசு அண்ணா,இந்த மனநிறைவு கொள்ளாத ஆசையால்தான் உலகமே தடுமாறி நிற்கிறது.இதைவிட உரத்துச் சொல்லவும் வேணுமோ...!
"சலிக்காமல் தழுவியும்
மறுபடி மறுபடி...."
நெகிழ்வான வரிகள்...
காலம் தோறும் அப்படித்தான்
இருக்கிறது வாசு அண்ணா...
கேட்டதுதானே...
அருமை நண்பரே... அருமை...
உங்களுடைய தொலைப் பேசி எண்ணை raghavannigeria@gmail.com - அனுப்பவும்.
ஆ அருமையான கவிதை.
ஒவ்வொரு வரியையும் மிகவும் ரசித்தேன். காலந்தோறும் அப்படித்தான் இருக்கும்
அருமை...
ஆசையே அழிவுக்கு காரணம்னு புத்தர் சொன்னதை, நீங்கள் அழகான கவிதையாக சொல்லியிருக்கின்றீர்கள்.
நல்லா இருக்கு
உங்களுக்கு என்னால் இயன்ற ஒரு சிறு பரிசு.வந்து பார்க்கவும்.
இங்கே கிளிக்கவும்.
//அ.மு.செய்யது said...
உங்களுக்கு என்னால் இயன்ற ஒரு சிறு பரிசு.வந்து பார்க்கவும்.
இங்கே கிளிக்கவும்.//
விருது பெறுவதற்கு வாழ்த்துக்கள்..... வழங்கிய அன்பு நண்பருக்கு நன்றிகள்...
// புணர்ச்சி முடிதலின்
கடைசிக்கணங்களில்
மறக்காமல் துளிர்க்கிறது பெருங்காமம் //
இந்த வரி நெம்ப டச்சிங்கா இருக்குங்க தலைவரே....!!!! வாழ்த்துக்கள்....!!!!!
கவிதையில் ஒரு தேடல் ஒவ்வொரு வழியிலும் தெரிகின்றது.
"அறியாமலே விட்டுச்செல்கிறது
ஒவ்வொரு நனைதலும்
பிறிதொரு மழைக்கான தேடலை"
லஷ்மி சாகம்பரியின் கவிதை வரிகளை நினைவு கூர்ந்தேன் உங்கள் கவிதை படிக்கும் போது.
எங்கும் எதிலும் நிறையாத மனம், தீராத தாகம், தேடல் இந்த வரிசையில் கவிதை செய்தல், விட்ட எந்த விசயத்தையும் பிடிக்க முயற்சி செய்தல் என்று இன்னும் எத்தனை எத்தனையையோ சேர்க்கலாம்.
அப்படித்தான் இருங்குங்கண்ணாஆஆஆஆஆஆஆஆஆ. உரத்து சொல்லிவிட்டேன். கேட்டுச்சா... கவிதைகளை திரும்பத் திரும்ப ரசித்து படித்தேன்.
விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.
இருந்துகொண்டே இருக்கும் குறைகளில் கூட எத்தனை அதிருப்தியை காட்டி உள்ளீர்கள்??
அற்புதம் வாசு.
மனிதவாழ்வின் ஆதாரத்திற்கான குறைகள்..! எப்படி விலக்குவது? நான் ஒரு சமுதாய விலங்கு..!
அற்புதம், அசத்தல், அருமை என எல்லா வார்த்தைகளிலும் இந்தக் கவிதையைப் பற்றி சொன்னாலும், உரக்கச் சொல்ல ஒரு வார்த்தையை தேடிக்கொண்டிருக்கிறேன் வாசு சார்.
!!!!!!!!!!!!
ரசித்தேன்..
மிக அருமை அய்யா..
அன்புடன்,
செந்தில்.
Excellant Vasu. கவிதை வெகு அற்புதம். மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்க்கத் தூண்டும்அழகான வரிகள்.
மிக அருமையான வரிகள். ரசித்தேன். சமீபகாலங்களில் உயிரோடை வழியே உங்கள் எழுத்துகளை வாசித்து வருகின்றேன்.
//முடிதலின்கடைசிக்கணங்களில்மறக்காமல் துளிர்க்கிறது பெருங்காமம்//
கவிதை கணங்களை உறைய வைக்கும் வார்த்தைகள்.
நன்றி!
எல்லோரின் வாழ்க்கையிலும் எப்போதும் எங்கேனும் வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது.. ஒவ்வொரு வரியையும் ரசிக்க முடிந்தது.
விருதிற்கும் வாழ்த்துக்கள் :-)
கவிதை நல்லா வந்திருக்கு... ரசித்தேன்
வாவ்! வாசு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை...
வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
வார்த்தை'கல்'
வாழ்த்துக்'கள்'
nalla varikal rasiththeen
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தோழமை உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
நான் ரொம்ப நல்லவன், வழிய வேண்டாம், நான்கு கோப்பைகளில் ரெமி மார்ட்டின் கோனியாக் கொடுத்தால் போதும். (60 ml each please)
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...