
வாதையே உணராமல்
தன்னுடலில் விசையூட்டி
மெத்தென்று
மதில் சுவருக்கும் தரைக்குமிடையே
பறந்ததுபோல் வந்தமரும்
வித்தை வாய்த்திருக்கிறது உனக்கு
சுவர் தாவி தரை சேர்
முன்னொடிகளில்
உன் வேட்கையின் மூடுசீலை
சற்றே விலக்கப்படுகிறது
எனை வியப்பிக்கச் செய்த
அக்கணங்களில்
இயல்பிலிருந்து சற்றே மாறி
மூர்க்கமாய் விழியுருட்டி
முறைக்கின்றாய் பயமுறுத்தும்
பாவனைப் பார்வையில்
துணிவேபோல் சற்றே நின்று
உற்று நோக்கி
ஓடியொளிகிறாய்
வீட்டின் பின்புறமாய்
என் மறு அசைவில்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
28 பின்மொழிகள்:
வாசு..கவிதை நன்று..ஒரு விசயம்..இன்று பூனைகளின் உடல்மொழி மாறியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது..முன்பை போல் அவை காலடி சலசலப்பிற்கு மிரளுவதில்லை..
கவிதை நன்றாக வந்திருக்கிறது.
அசத்துகிறீர்கள்....வாசு சார்.
//துணிவேபோல் சற்றே நின்று//
துணிவை போல் என்று ( "ஐ" 2 ஆம் வேற்றுமை உருபை பயன்படுத்தாமல் )
சங்க இலக்கியங்களில் எடுத்தாள்வது போல பயன்படுத்தியிருக்கும் விதம் வியப்புக்குரியது.
எ.கா: "பொன்னே போல்" சரிதானே ??
அற்புதமான கவிதை. இன்றைய அவசரங்களில் பூனையைக் கவனிப்பவர்கள் குறைவு. உங்கள் கவனிப்பு அழகான கவிதையாயிருக்கிறது. தொடருங்கள்.
ஸ்ரீ....
உங்கள் கவிதை அழகாக இருக்கிறது....
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்.... தொடருங்கள்....
கவிதை மிக நன்று. எங்கள் வீட்டருகில் பூனைகள் அதிகமிருக்கும். ஆனாலும் எனக்கு இப்படி எழுத தோன்றவேயில்லையே...
உங்கள் மொழிநடை நன்றாக இருக்கிறது. keep it up. தேர்ந்தெடுக்கப்பட்ட கணங்களை உறைய வைத்த கவிதை.
பூனாச்சிக்கு கவிதையா....!! நெம்ப சூப்பர்...!!! எழுதீட்டு அத முடிக்கியுட்டுட்டீங்களா???
பூனாச்சி சார் நிக்குர ஸ்டைல பாத்தா.. கம்ப்யூட்டர் மானிட்டருல இருக்குற உங்க கவிதைய ஆர்வமா படிக்கிற மாதிரி இருக்கு...??????? ஆனா ஓடுறதுக்கு ரெடியா இருக்குற மாதிரியும் இருக்கு.......!!!!!
அருமையான கவிதை...!!! வாழ்த்துக்கள் தோழரே.......!!!!
வாழ்க வளமுடன்.....!!!!!
எதிர் கவுஜ போடலாமா!
போதையே உணராமல்
இரு உதடுகளை
ஒன்றுகூட்டி
பூமிக்கும் வானுக்குமிடையே
பறந்து செல்லும்
விமானம்போல் புகைவிடும்
வித்தை வாய்த்திருக்கிறது உனக்கு
வாசு அண்ணா,பூனைக்குட்டிக் கவிதை அழகு பூனைக் குட்டிபோலவே.இங்கு பூனைகள் நிறைய இருக்கு.ஆனால் நான் அவர்கள் உயரங்களில் ஏறிக்குதித்துப் பார்த்ததில்லை.ஒருவேளை தெரியாதோ...பழக்கவில்லையோ...!இங்கு எல்லாமே புத்தகப் படிப்புத்தானே.
பூனைகளை விரும்பாதவன் என்றாலும் இந்தக் கவிதை பிடித்திருக்கிறது எனக்கு.
சற்றே நின்று
உற்று நோக்கி
ஓடியொளிகிறாய்
வீட்டின் பின்புறமாய்
என் மறு அசைவில்
nice imagination :)
//வாதையே உணராமல்
தன்னுடலில் விசையூட்டி
மெத்தென்று
மதில் சுவருக்கும் தரைக்குமிடையே
பறந்ததுபோல் வந்தமரும்
வித்தை வாய்த்திருக்கிறது உனக்கு//
விசையையும் தசையையும் ஒப்பிட்ட உங்கபார்வை அருமை
கவிதை அழகாக வந்திருக்கு வாசு
கவிதை
நல்லாருக்குங்க
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
////இயல்பிலிருந்து சற்றே மாறி
மூர்க்கமாய் விழியுருட்டி
முறைக்கின்றாய் பயமுறுத்தும்
பாவனைப் பார்வையில்////
திரும்பத் திரும்ப வாசித்த வரிகள்....
உங்கள் பயணம் தொடரட்டும்.....
வாழ்த்துக்கள்....
துணிவேபோல் சற்றே நின்று
உற்று நோக்கி
ஓடியொளிகிறாய்
வீட்டின் பின்புறமாய்
என் மறு அசைவில்.
மிரட்டிவிட்டீர்களோ....
அழகு கவிதை வாசு சார்....
:) அழகாக வந்திருக்கிறது கவிதை. நன்றா இருக்கு.
நானும் கூட பூனைக் குட்டிகள் என்ற தலைப்பில் கவிதை எழுதிருக்கேன்.
ஆனால் அது பூனைக் குட்டிகள் பற்றியதல்ல. ;-)
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_4554.html
பூனை என்பதிங்கு பூனை மட்டுமல்ல என்பது மட்டும் புரிகின்றது. ஒரு வேளை
//வாதையே உணராமல்
தன்னுடலில் விசையூட்டி
மெத்தென்று
மதில் சுவருக்கும் தரைக்குமிடையே
பறந்ததுபோல் வந்தமரும்
வித்தை வாய்த்திருக்கிறது உனக்கு
//
வாமன் அவதாரம்.
இங்கே மனிதனின் ஆசை அடங்கா மனதை சொல்லி இருப்பது போலவும் படுகின்றது.
//எனை வியப்பிக்கச் செய்த
அக்கணங்களில்
இயல்பிலிருந்து சற்றே மாறி
மூர்க்கமாய் விழியுருட்டி
முறைக்கின்றாய் பயமுறுத்தும்
பாவனைப் பார்வையில்//
வியப்புன்னு நாம நினைக்கிற சிலது நம்மை பயம் கொள்ள செய்யுமே சில சமயம். அதுவா?
(அலகுல மயங்கி விலறதுன்னா இது தானா?!!)
//என் மறு அசைவில்// என்பது புத்தியை குறிக்கின்றதோ.
பின் நவீனம் என்பது இதுவா.
அதான் எனக்கு புரியும் ஆனா புரியாது போல இருக்கு.
கவிதை அழகு ...;-))))
சில கரும் பெரும் பூனைகள் இப்படி துணிவேபோல் சற்று எதிர்நோக்கும்போது, ஒரு சிறு பயம் மனதினுள் மின்னலாய் வந்து மறையும்.
அழகு!
ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் சிக்கலான நாள்தான்.
//பூனை என்பது பூனையல்ல//
உயிரோடை. மிகச்சரி.
ஞாயிற்றுக் கிழமை மத்தியப் பூனை
தளம் தளமாய் தாவுகிறது...
பூனையொரு ரூபம்.
ஞாயிறும்,மதியமும்
அழகிய அரூபம்.
உணர தந்து விலகி நிற்கிறீர்கள்
வாசு அண்ணா..
கவிதை மிகவும் பிடித்திருக்கிறது, அருமை.
அருமையான கவிதை. பூனைகள் எப்போதும் கவிஞர்கள் கற்பனையைக் கவர்பவை.
போலவே, லாவண்யாவின் புரிதலும் அசத்துகிறது. 'அந்தர வெளிகளில்' போடலாமே.
அனுஜன்யா
பூனை என்பதிங்கு பூனை மட்டுமல்ல என்பது மட்டும் புரிகின்றது
நன்றி தண்டாரோ
(உங்கள் நகரத்துப் பூனைகள் வேண்டுமானால் மாறியிருக்கலாம்)
நன்றி அ.மு.செய்யது
(தமிழை கரைத்துக் குடித்திருப்பீர்கள் போல. உங்கள் யூகம் சரிதான்)
நன்றி ஸ்ரீ.
நன்றி சந்ரு.
நன்றி குடந்தை அன்புமணி.
நன்றி ராமலிங்கம்
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்)
நன்றி லவ்டேல் மேடி.
நன்றி வால்பையன்.
நன்றி ஹேமா.
நன்றி ஜோ
(பூனையை ஏன் பிடிக்காது)
நன்றி நளன்
(முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்)
நன்றி சொல்லரசன்
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி பிரவின்ஸ்கா
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
(முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்)
நன்றி சக்தி
நன்றி விதூஷ்
நன்றி உயிரோடை (வித்தியாசமான பார்வையில் கவிதையை அணுகியதற்கும்)
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி உழவன்
நன்றி காமராஜ்
நன்றி பா.ராஜாராம்
நன்றி யாத்ரா
நன்றி அனுஜன்யா
நன்றி முத்துவேல்
பூனை, நாய் போன்ற எந்த வீட்டுப் பிராணியையும் எனக்குப் பிடிக்காது, ஏன் என்று தெரியவில்லை.
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...