
மரமிழைப்பில் சுருண்டோடி
விழும் சருகுச்சுருளை
பசுந்தழையோவென
முகர்ந்து விலகுகிறது
கட்டி வைக்கப்பட்ட ஆடு.
ஓடாது தேங்கிய சாக்கடையில்
தெளிந்திருந்த மேல்நீரைப்
பருகி தாகம் தீர்க்கிறது
காக்கைக்குஞ்சு.
வாயடைக்க இழுத்துத்தின்ற
சுவரொட்டியின் நீள்துண்டு
தொண்டைக்குள் கமற
வினோத ஒலியெழுப்பி
வேதனை பகிர்கிறது மாடு.
வெளிவாசல் வெயில்
தழைந்து உள்நுழைய
காட்சிகளில் சலிப்புற்று
குப்புறப்படுக்கிறது நான்.
'அகநாழிகை'
பொன்.வாசுதேவன்
32 பின்மொழிகள்:
மிக வலிய கவிதை இப்படியொரு
கவிதை படித்தபின் பின்னூட்டமமில்லாமல்
கடந்துபோதல் கொடிது. மி.....க, மிக
அருமை.
என்ன சொல்ல வாசு?
எல்லோருக்கும் இவ்விதமாகத்தான் கழிகிறது வாழ்க்கை. கவிதை புனைவதும் கடந்து போவதும் அவரவர் இயல்பாகிவிட்டது.
அக்றிணை 'நான்' அழகு!!
வாசு அண்ணா மிக அழகு வாழ்வின் எதார்த்த வலியோடு.
கடைசிப்பந்தி "நான்" கவிதையைத் தூக்கி வைக்கிறது.நீண்ட நாட்களின் பின் நான்.
மனதை கசக்கும் கவிதை.
பசுந்தழையோவென முகர்ந்து விலகும் ஆடு எதை எதையோ எதிர்பார்த்து ஏமாறும் மனத்தோடு ஒப்பிட வைக்கிறது.
சாக்கடை போலும் விசயம் மலிந்த உலகில் அத்தியாவசிய தேவைக்கு சில விசயங்களை பொருக்கி கொள்ள அவலம். நாம் வாசிக்க நினைக்கும் விசயங்களோடு விசமங்களும் வலையில் பெருகி இருக்கும் நாம் தேடி தேர்வதைக்கூட யோசித்து பார்க்கலாம்.
தள முடியாத இயலாமைக்கு கிடைக்கும் எதையோ உள்வாங்கி தொண்டை கமறும் மாடு போல் மனிதனும்....
//குப்புறப்படுக்கிறது நான்.//
இயலாமையை சொல்லி இருக்கீங்க இந்த இடத்தில். சமூக அக்கரைன்னு கூட எடுத்துக்கலாம்.
மேலும் உங்கள் வெறுப்பை வேதனையே ஆடு,காகமும் மாடும் வெளிப்படுத்துவதாகவும் பார்க்கலாம்
படிக்க படிக்க என்ன என்னவோ தோணுங்க அகநாழிகை பொன்.வாசுதேவன்
வாழ்த்துகள் ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க. ப்ளீஸ் வாரம் இப்படி ஒரு கவிதையாவது போஸ்ட் பண்ணுங்க.
நல்லா இருக்கு..
கவிதை சூப்பர்.
கமெண்ட் போடும்போது
"show the original text"ஐ கிளிக்கினால் கடைசி வரிகள் எப்படி தெரிகிறது பாருங்கள்.நகைமுரண்.
வெளிவாசல் வெயில்
தழைந்து உள்நுழைய
காட்சிகளில் சலிப்புற்று
குப்புறப்படுக்கிறது நான்.'அகநாழிகை' பொன்.வாசுதேவன்
ஆதியும் அந்தமும் அருமை ... ரெண்டாவது குறிப்பை வேறு காட்சியாக நான் கண்டதை வேறு விதமாக நானும் என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பது நினைவிற்கு வருகிறது ...
மை தரும் வலி வலிமை.
அதுவாக நானை பார்ப்பது.... கஷ்டம்தான்.
பிறர் பிரச்சனைகளை பார்ப்பது சலிப்புதான், அது நமதென்றாகும் வரை.
தினக்காட்சிகளின் அவதானிப்பு அருமை.
// மரமிழைப்பில் சுருண்டோடி
விழும் சருகுச்சுருளை
பசுந்தழையோவென
முகர்ந்து விலகுகிறது
கட்டி வைக்கப்பட்ட ஆடு. //
அருமை.. அருமை.....!! ஆளு நல்லாதேன் இருக்குறான் .. இவனாவது நமக்கு எதாச்சும் செய்யுவான் என்று .... புதுப் பொழிவு அரசியல் வியாதிக்கு ஓட்டுப்போடும் நம் மக்களைப் போல் ........
// ஓடாது தேங்கிய சாக்கடையில்
தெளிந்திருந்த மேல்நீரைப்
பருகி தாகம் தீர்க்கிறது
காக்கைக்குஞ்சு. //
நாறும் சாக்கடையின் ஓரத்தில் ஜீவனம் செய்யும் பாமர மக்கள் ... .. !!
// வெளிவாசல் வெயில்
தழைந்து உள்நுழைய
காட்சிகளில் சலிப்புற்று
குப்புறப்படுக்கிறது நான். //
அவ்வளவு சோம்பலா உங்களுக்கு...!!!
அருமையான வரிகள்....!!!
வாழ்த்துக்கள் தோழரே.....!!!!
அருமையான கவிதை, மிகவும் பிடித்திருக்கிறது.
//வெளிவாசல் வெயில்
தழைந்து உள்நுழைய
காட்சிகளில் சலிப்புற்று
குப்புறப்படுக்கிறது நான்//
அருமை, வேறு எப்படி சொல்வதெனத் தெரியவில்லை.
//காட்சிகளில் சலிப்புற்று
குப்புறப்படுக்கிறது நான்.//
யாராவது இந்த குப்புறபடுக்குற மாட்டுக்கு தண்ணி காட்டுங்கப்பா!
பலவிதமா யோசிக்கவைக்குது.பெரும்பாலும் நேரடியாகவே கவிதைகளை அணுகும் எனக்கே இப்படி.
கிராமங்களின் அழிவு, நகரமயமாதல்,சுற்றுச்சூழல்கேடு, உலகமயமாதல் போன்ற காரணிகள் மனிதர்களை, விலங்குகளை பாதிக்கும் விசயம் என்னுடைய ஒரு பார்வை.
எளிமையான, வலிமையான கவிதை.
//மரமிழைப்பில் சுருண்டோடி
விழும் சருகுச்சுருளை
பசுந்தழையோவென
முகர்ந்து விலகுகிறது
கட்டி வைக்கப்பட்ட ஆடு.//
ரசிக்கும்படியான வரிகள்..கிராம சூழலை கண்முன் காட்டி செல்கின்றது வாசு
கவிதை நல்லா வந்திருக்கு. காட்சியாக விரிகிறது.
அகம்பாவத்தின் அடையாள வார்த்தை
பரிதாபத்தின் வெளிப்பாடாய்...
நான்...வாசு ..ராயல் ரிசர்வ் சல்யூட்
என்னை அடித்து துவைக்கிறது உங்கள் வார்த்தைகள்.
கவிதையெழுதிகளுக்கு இது ஒரு நல்ல கண்காட்சி கவிதையாக இருக்கும்.
அஃறிணைகளுக்க்கு வருத்தப்படுவதா, இல்லை அஃறிணையாய் உருவகிக்கப்பட்ட உயர்திணைக்கு வருத்தப்படுவதா,
கவிதை அருமை + யதார்த்தம்.
கவிதை அருமை
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
கவிதையை படிக்கையில் காட்சிகள் விரிகிறது...
நல்லாருக்கு வாசு சார்...
azhuththamana kavithai..
miga yeliya vaarththaikal..
nallaayerunthathu:)
மிக அருமை என்று சொல்வதை விட மெளனமே மிகச்சிறந்த பின்னூட்டம் இங்கே என்னளவில்.
ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கிறது. ஒன்று கிடைக்கும்போது, அது நமக்கானது இல்லை எனத் தெரியவருகிறது. இன்னொரு சமயம் கிடைத்ததிலிருந்து நமக்கானவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைமை. சில பொழுதுகளில் ஏன்தான் இது நமக்குக் கிடைத்ததோ என எண்ணும் நிலை... இப்படி நிறைய நம் வாழ்வில்... அருமை.
மனதை நெகிழ்த்தும் கவிதை...:-)
உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்.....
வாழ்த்துக்கள்....
நம்ம பக்கமும் வந்து பாருங்களேன்...
மிக எளிய சொற்களில்
வெகு ஆழம் பயணிக்கிறது இக்கவிதை
உக்கிரமான பாதிப்புகளை நிகழ்த்துகிறது
அற்புதம், நீங்க யாரு புலிக்கு பால் கொடுத்த சிங்கமுல்ல !!!!!!
நம்ம பக்கமும் அடிக்கடி வந்து பாருங்க சார்.
நன்றி காமராஜ்
நன்றி வடகரைவேலன்
நன்றி கார்த்தி
நன்றி ஹேமா
நன்றி உயிரோடை
நன்றி கார்த்திகேயன் ஜி
நன்றி கே.ரவிஷங்கர்
நன்றி நந்தா
நன்றி விதூஷ்
நன்றி பீர்
நன்றி லவ்டேல் மேடி
நன்றி யாத்ரா
நன்றி வால்பையன்
நன்றி முத்துவேல்
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி மாதவராஜ்
நன்றி தண்டாரோ
நன்றி அ.மு.செய்யது
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி குடந்தை அன்புமணி
நன்றி பிரவின்ஸ்கா
நன்றி இரசிகை (தமிழ் இல்லையா)
நன்றி நர்சிம்
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி சந்ரு
நன்றி நேசமித்ரன்
நன்றி பிரபா
விலங்குகளின் இன்றைய நிலை பற்றி சொல்லி இருக்கீங்க..!!
நல்லா எழுதியிருக்கீங்க. அருமை.
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...