சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்
சூழ்ந்து அகன்று
உயர்ந்து
தாழ்ந்து
நெருங்கி
விலகி
சேர்ந்து
பிரிந்து
அடித்து
அணைத்து
அழுது
சிரித்து
செலவழிக்கலாம்
வருகிறது
புது வருடம்...
வாழ்த்துக்கள்...!
- பொன். வாசுதேவன்

கண் முன் ஒரு தேவதை
அலைகளை
சேகரித்து வீசுகிறாள்
முகத்தின் மீது
கழுவிச் சலிக்கின்றன அலைகள்
அலை சூடிய முகடு
கடற்கரையில் செல்கிறேன்
இப்போது
வேறொரு தேவதை
கடற்காற்றில் வலை படபடக்க
வீசுகிறாள்
தப்பி ஒளிகிறேன் கடலுக்குள்
அலையையும்
வலையையும்
கடந்து முழ்கித் தேடுகிறேன்
மற்றுமொரு தேவதையை
(காயத்ரிக்கு...)
- பொன். வாசுதேவன்
"புதிய பார்வை" 16-31, 2007 இதழில் வெளியானது.

அடர் மழை மௌனமாய்
யாருக்கும் தெரியாமல்
இறங்கும் வேலையில்
உயிர்ச்சுழி தேடிப் பரவுகிறது
நீ வீசிய வலை
விழி தீண்டும் தூரம் அறியாது
அப்பிக்கிடக்கிறது இருள்
வெடிக்காத இசையின்
அரூப ஒலியாய்
காத்திருக்கிறது
வலை வருடிய கைகள்
தனியுச்சியில் புதையுண்டு
தருணம் நோக்கி
காத்திருக்கிறேன்
வலைக்குள் உன்னை இருத்த.
- பொன். வாசுதேவன்
"புதிய பார்வை" ஆகஸ்ட் 16-31, 2007 இதழில் வெளியானது.
பிசைந்தெடுத்து வழிய விடுவாய் அன்பற்ற இறுக்கத்தை
இரைச்சல்களற்று
எல்லாம் உறங்கும்
இரவின் விளிம்பில் அமர்ந்து
காத்திருந்த நீ
என் மேல்
இப்போதும் ஒரு கணம்
படரும் ஒசையெனக்கு
கேட்கிறது சுவாசமாய்
சருமம் கருக
நிரப்பவியலா பள்ளத்தாக்கில்
உருகி வழிந்து ஓயும் ஊற்றாய்
களைத்துறங்குகிறாய்
ஒரு சொல் இல்லை
மொழிகளுக்கப்பாற்பட்டு அதிரும் ஓசை
உள் பேசும் நான்
மின்னலாய் தோன்றுமொரு யோசனை
பாய்ந்து வெளிப்பட்டாலென்ன
அறுந்து சுருண்டு
கவிழ்ந்து படுக்கும் நான்
களைத்து குழந்தையாகியுறங்கும்
உன் முதுகு பார்த்து...
- பொன்.வாசுதேவன்
" புதிய பார்வை " ஆகஸ்ட் 16-31, 2007- ல் வெளியானது.
நிழல் மிதிபடாத
மாலை வேளையில்
கண்களின் குளுமை
இதயத்தை நிரப்ப
இணைந்திணைந்து
செல்கின்றனர் நண்பர்கள்
முகம் உமிழ்ந்த
புன்னகையின் மிச்சமாய்
தொடர்கிறது உரையாடல்
களைப்பின்றி
அந்தரங்கப்பூக்கள் மலர
உன்னைப்பற்றி
என்னைப்பற்றி
இவரைப்பற்றி
யாவரையும் பற்றி
ஊற்றாய் பரவுகிறது பேச்சு
கைபிடியளவு அள்ளிக்கொண்டு
ஒரு புள்ளியில் விலகிச் செல்கின்றனர்
வீதியெங்கும்
அணுவணுவாய் இறைத்தபடி...
- பொன். வாசுதேவன்

ஆகஸ்ட் 2007 இதழில் வெளியானது.
அன்பின் தடம் பல தேடியலைந்துகூடடைந்தேன் சிலகாலம்எண்ணங்களில் மிதந்தஉன் வசீகர ஆசைகளும் மொட்டவிழ்ந்து கரை சேர்ந்த நேரம் அதுபேசி முடித்த கணத்திலிருந்துஅடுத்த ஆரம்பத்தை எதிர்நோக்கிவிடிந்த பொழுதுகள்புன்னகை விளையும் விழிகளின் நொடிகளுக்கு காரணமாய்தொடர்ந்தன நினைவுகள்பறவையின் காலடி தேடும்வான்வெளி விளையாட்டாய்முளைத்தெழுந்தன நமக்கான நட்சத்திரங்கள்தீண்டாமல் நீ தந்த வெதுவெதுப்பில் இதயம் உறங்கச் சென்ற நாட்கள் பல..நான் உனக்கானவன் இல்லைநீ எனக்கானவள் இல்லைநீ இருக்கிறாய்நானும்...வளராதிருக்கும்வரைவலைகளின் இடுக்கில் கசிந்துதப்பியோடும் சிறு மீன்களின் குதியாட்டமாய் படர்கிறது சந்தோசம்இறுக்கிய விரல்களுக்குள்கனவுப்பூக்களை சேமித்துக் கோர்த்துசூடிகொள்கிறேன் எனக்குள் உன் நினைவுகளைமாலையாக....- பொன். வாசுதேவன்